மோட்டார் சைக்கிளை தவறவிட்டதால் விரக்தி: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

" alt="" aria-hidden="true" />

செங்குன்றம், 

 

சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஜான் கல்வின் (வயது 32). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தந்தை ராஜசேகரை பார்க்க சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஜான் கல்வின் செல்லும் வழியில் புழல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போதை தலைக்கு ஏறியநிலையில், மோட்டார் சைக்கிளை கடையின் வாசலிலேயே விட்டு மறந்து சென்றுவிட்டார்.அதன்பின்னர், மோட்டார் சைக்கிளை தவறவிட்டது ஞாபகம் வந்ததை தொடர்ந்து, டாஸ்மாக் கடைக்கு வந்து தேடியுள்ளார். ஆனால் அங்கு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


 


 

தூக்குப்போட்டு தற்கொலை

 

இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து அழுது புலம்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜான் கல்வின் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து - கொரோனா முன்னெச்சரிக்கை
Image
அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை - டாக்டர்கள் தீவிர சிகிச்சை
Image