அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

" alt="" aria-hidden="true" />


 


தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் உறவினர்கள் கண்காணித்து வந்தனர்.


கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் மூத்த தலைவரான அன்பழகனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார். நேற்று இரவு கூட அவர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அன்பழகனுக்கு வெண்டி லேட்டர் உதவியுடன் 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நலம் குறித்து தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கேட்டறிந்து வருகின்றனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் அன்பழகனுக்கு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


Popular posts
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து - கொரோனா முன்னெச்சரிக்கை
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது
Image